5094. | பரித்தசெல்வம் ஒழியப் படரும் நாள், அருத்திவேதியற்கு ஆன் குலம் ஈந்து, அவன் கருத்தின் ஆசைக்கரை இன்மை கண்டு, இறை சிரித்த செய்கைநினைந்து, அழும் செய்கையாள். |
பரித்த -தன்குலத்தவரால் சுமத்தப் பெற்ற; செல்வம் - அரச செல்வம்;ஒழிய - பரதன்பால் தங்க; படரும் நாள் - காட்டுக்குச் சென்ற காலத்தில்;அருந்தி வேதியற்கு - ஆசைமிக்க திரிசடன் என்னும் அந்தணனுக்கு;ஆன்குலம் ஈந்து - பசுக் கூட்டங்களை வழங்கியும்; அவன் - அந்தஅந்தணனின்; கருத்தின் ஆசை - உள்ளத்தில் உள்ள ஆசைக் கடலுக்கு;கரை இன்மை கண்டு - கரை இல்லாமல் இருப்பதைப் பார்த்து; இறை -சிறிதே; சிரித்த செய்கை - சிரித்த இராமபிரானின் செயலை; நினைந்து -எண்ணி; அழும் செய்கையாள் - ; நாடு துறந்து காடு போம்காலத்தில் திரிசடனுக்குப் பசுக்கூட்டங்கள் வழங்கியும் அவன் ஆசை எல்லையற்றுப் போவதைக் கண்டு சிரித்த இராமபிரானின் செயலை நினைந்து வருந்தினாள். ஒழிய - தங்கல் 'தோழன் நீ எனக்கு இங்கு ஒழி', என்னும் பெரிய திருமொழி ஒழிய - தன்னைவிட்டு நீங்க என்றும் பொருள் கூறலாம். (26) |