5096.

ஏக வாளிஅவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி, அதுகண் பொடித்த நாள்,
காகம் முற்றும்ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியைத்தன் தலைமேல் கொள்வாள்.

     ஏகவாளி -ஒற்றைஅம்பை;  அ இந்திரன் காதல் மேல் - (காகமாய்வந்த) அந்த இந்திரன் புதல்வனாகிய சயந்தன் மேல்; போக ஏவி -
செல்லும்படி பிரயோகித்து; அது - அந்த அம்பானது; கண் பொடித்த நாள்
-
கண்ணை அழித்த காலத்தில்; காகம் முற்றும் - எல்லாக் காகங் கட்கும்;
ஓர் கண் இலவாகிய -
ஒற்றைக் கண் இல்லாதபடி ஆன; வேக வென்றியை
-
தடையற்ற வெற்றிச் சிறப்பை; தன்தலைமேற்கொள்வாள் - தன்னுடைய
தலைமேலே வெற்றி கொண்டாடுவாள்.

     'சித்திரகூடத்திருப்ப' என்னும் பெரியாழ்வார் பாசுரத்தையும், நாட்டு
வழக்கையும் அடியொற்றி இப்பாடல் எழுந்தது. இந்திரன் செம்மல் - சயந்தன்;
குற்றவாளியாகிய சயந்தன் கண் ஒன்றுமே இராமன்
 அம்புக்குஇலக்காயிற்று.
எனினும் அவன் இனமும் ஒரு கண் இழந்தன என்பார். 'கண்ணிலவாகிய
வேகவென்றி' என்றார். எனவே ஆகிய பாடம் சிறக்கும் என்று அண்ணாமலை
- பதி - பேசும். (கண்ணில் என்புழி வாக்கிய பாடம் ஒதுக்கப்பட்டது)    (28)