| 5100. | 'நலம் துடிக்கின்றதோ ? நான் செய் தீவினைச் சலம் துடித்து,இன்னமும் தருவது உண்மையோ ? -- பொலந் துடிமருங்குலாய் ! - புருவம், கண், முதல் வலம்துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன். |
பொலந்துடிமருங்குலாய் - பொன்னால் செய்யப்பெற்ற உடுக்கை போன்ற இடையை உடைய திரிசடையே; புருவம், கண் முதல் - புருவமும், கண்ணும், முதலியன; வலம் துடிக்கின்றில - வலப்பக்கம் துடிக்கவில்லை; நலம் துடிக்கின்றதோ - நன்மை என்னையடையத் துடித்துக்கொண்டுள்ளதோ (அல்லது); நான் செய் - நான் முன்பு செய்த; தீவினைச் சலம் - தீவினையால் எழுந்த கொடுமை; துடித்து - துடிதுடித்து (என் பக்கம் வந்து); இன்னமும் தருவது - இதற்கு மேலும் தரக்கூடிய துன்பம்; உண்மையோ ? - உள்ளதா?; வருவது ஓர்கிலேன் - இனிமேல் நிகழ்வதை ஆராய முடியாமல் உள்ளேன். (32) |