5108. | 'எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத் திண் நெடுங்கழுதை பேய் பூண்ட தேரின்மேல், அண்ணல் அவ்இராவணன், அரத்த ஆடையன், நண்ணினன்,தென்புலம் - நவை இல் கற்பினாய் !' |
நவை இல்கற்பினாய் - குற்றமற்ற கற்புடையபிராட்டியே; அண்ணல் வேல் இராவணன் - சிறந்த வேலேந்திய இராவணன்; பொன்முடிதொறும் எண்ணெய் இழுகி - அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய்பூசிக்கொண்டு; இரத்த ஆடையன் - சிவந்த ஆடையை அணிந்தவனாய்; கழுதை பேய் பூண்ட - கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற; ஈறு இலா - சென்று சேரும் இறுதியை அறியாத; திண் நெடும் தேரின் மேல் - திண்மையான பெரிய தேரிலே (ஏறி); தென் புலம் நண்ணினன் - தெற்குத் திசையை அடைந்தான். வாள் அரக்கன்என்று திருமுறைகள் பேசும். கம்பரும் அங்ஙனமே கூறுவார். கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லல் தென் திசையில் போதல் முதலியன கேட்டுக்கு அறிகுறி. வால்மீகத்தில் திரிசடை அரக்கியர்பால் கூறுகிறாள். (40) |