5109.

'மக்களும்,சுற்றமும், மற்றுளோர்களும்,
புக்கனர் அப்புலம்; போந்தது இல்லையால்;
சிக்கு அறநோக்கினென்; தீய, இன்னமும்
மிக்கன, கேட்க'என, விளம்பல் மேயினாள்.

     மக்களும்சுற்றமும் - இராவணணின்புதல்வர்களும் உறவினர்களும்;
மற்று உளார்களும் - மற்றைய அரக்கர்களும்; அப்புலம் புக்கனர் - அந்தத்தென்திசையை அடைந்தனர்; போந்தது இல்லை - (அவர்கள்)
திரும்பிவரவில்லை; சிக்கு அற நோக்கினென் - (இதனை) குழப்பமின்றிப்
பார்த்தேன்; இன்னமும் - மேலும்; மிக்கன தீய - மிகுதியான தீமை
விளைவிக்கும் கனவுக் காட்சிகளை; கேட்க என - கேட்பாயாக என்று;
விளம்பல் மேயினாள் - சொல்லத் தொடங்கினாள்.

      போந்ததுஎன்பது புகுந்தது என்பதன் மாற்று வடிவம்.       (41)