| 5113. | 'திரியுமால், இலங்கையும் மதிலும்; திக்கு எலாம் எரியுமால்;கந்தர்ப்ப நகரம் எங்கணும் தெரியுமால்;மங்கல கலசம் சிந்தின விரியுமால்;விளக்கினை விழுங்குமால், இருள். |
இலங்கையும்மதிலும் திரியும் - இலங்கை மாநகரமும்மதில்களும் சுழலும்; திக்கு எலாம் எரியும் - எல்லாத் திசைகளிலும் தீப்பற்றி எரியும்; எங்கணும் - எல்லா இடங்களிலும்; கந்தர்ப்ப நகரம் தெரியும் - கந்தர்வ நகரங்கள் காட்சி தரும்; மங்கல கலசம் சிந்தும் - மங்கல கலசங்கள் சிதையும்; விளக்கினை விழுங்கும் இருள் - விளக்கையே விழுங்கும் இருளானது; விரியும் - எவ்விடத்தும் பெருகும். ஆல்கள் - அசை.வானமேகங்கள் நகரம்போல் காட்சி தருவதைக் கந்தர்வ நகரம் என்று கூறுவர். கந்தர்ப்ப நகரம் - பெண் குறி (வி.கோ. பிள்ளை) கந்தர்வ நகரம் எல்லாத் திக்கிலும் எப்போதும் தோன்றுமாயின் அது அரசனுக்கும் தேசத்திற்கும் பேரச்சத்தை விளைவிக்கும் என்று வராகமிகிரர் கூறியுள்ளார். (வை.மு.கோ) கந்தர்வ நகரம் - மன்மதன் படை வீடான சோலை என்பது பழைய உரை. (அடை - பதி) (45) |