| 5114. | 'தோரணம்முறியுமால், துளங்கி; சூழி மால் வாரணம்முறியுமால், வலத்த வாள் மருப்பு; ஆரண மந்திரத்துஅறிஞர் நாட்டிய பூரண குடத்து நீர்நறவின் பொங்குமால். |
தோரணம் -நகரில்உள்ள தோரண கம்பங்கள்; முறியும் - ஒடியும்; சூழிமால் வாரணம் - முகபடாம் அணிந்த யானைகள்; துளங்கி - நடுக்கம் அடைய (அதனுடைய); வலத்த வாள் மருப்பு - வலிய நீண்ட தந்தங்கள்; முறியும் - ஒடியும்; ஆரணம் மந்திரத்து அறிஞர் - வேத மந்திரங்களை அறிந்த அந்தணர்களால்; நாட்டிய - பிரதிஷ்டை செய்யப் பெற்ற; பூரண குடத்து நீர் - பூரண கும்பத்தில் உள்ள தீர்த்தம்; நறவில் பொங்கும் - கள்ளைப் போலத் ததும்பி வடியும். துளங்கி என்னும்செய்து என்னும் எச்சம் செய என்னும் வாய்பாட்டுப் பொருளில் வந்துளது. காய்ச்சப் பொங்குவது கூழ் - காய்ச்சாமல் பொங்குவது கள் (அடை - பதி) (46) |