'மங்கையர்மங்கலத் தாலி, மற்றையோர் அங்கையின்வாங்குநர் எவரும் இன்றியே, கொங்கையின்வீழ்ந்தன; குறித்த ஆற்றினால், இங்கு, இதின்அற்புதம், இன்னும் கேட்டியால்.
மங்கையர் -அரக்கிகளின்; மங்கலத்தாலி - மங்களத்தை விளைவிக்கும் தாலிகள்; அங்கையில் வாங்குநர் மற்றவர் எவரும் இன்றி - கைகளால் அறுப்பவர்கள் பிறர் எவரும் இல்லாமல் (தாமாகவே); குறித்த ஆற்றினால் - தீய அடையாளங்கள் என்று கூறப்பட்டபடி; கொங்கையில் விழுந்தன - மார்பில் வீழ்ந்தன; இங்கு - இந்த இலங்கையில் (நிகழ்ந்த); இதின் அற்புதம் - (இந்தக்) கனாக் காட்சியின் அதிசயத்தை; இன்னும் கேட்டி - மேலும் கேட்பாயாக. (48)