512.

'கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப்
பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ?

     அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது என
சுக்ரீவன் உணர்த்தல்.                                   (19-12)