5125.

ஒருபது கையினர், ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர்,இரண்டு கையினர்;
வெருவருதோற்றத்தர்; விகட வேடத்தர்;
பருவரை என, முலைபலவும் நாற்றினர்.*

(அரக்கிகள்)

     ஒருபதுகையினர் - பத்துக் கைகளை உடையவர்கள் (ஆனால்);
ஒற்றைச் சென்னியர் -
ஒரு தலையைப் பெற்றவர்கள்; இருபது தலையினர் -இருபது தலைகளை உடையவர்கள் (ஆனால்); இரண்டு கையினர் -
இரண்டுகைகளைப் பெற்றவர்கள்; வெருவரு தோற்றத்தர் - அச்சத்தை
உண்டுபண்ணும் தோற்றம் உடையவர்கள்; விகட வேடத்தர் - மாறுபட்ட
கோலத்தைப் பூண்டவர்கள்; பருவரை என - பருத்த மலைபோல; முலை
பலவும் -
இரண்டுக்கு மேற்பட்ட முலைகளை; நாற்றினர் - தொங்கவிட்டுக்
கொண்டிருப்பவர்கள்.

    சில என்பதுஇரண்டையும், பல என்பது இரண்டுக்குமேற்பட்டவற்றையும்
குறிக்கும்.                                               (57)