5126.

சூலம்,வாள், சக்கரம், தோட்டி, தோமரம்,
கால வேல்,கப்பணம், கற்ற கையினர்;
ஆலமே உருவுகொண்டனைய மேனியர்;
பாலமேதரித்தவன் வெருவும் பான்மையர்.*

     சூலம் வாள்சக்கரம் - சூலத்தையும் வாளையும்சக்கரத்தையும்;
தோட்டி தோமரம் -
அங்குசத்தையும் இருப்புலக்கையையும்; காலவேல்
கப்பணம் -
காலனை ஒத்த வேலையும் கப்பணத்தையும்; (பிரயோகிப்பதற்கு)
கற்ற கையினர் - அறிந்த கையை உடையவர்; உருவு கொண்ட - வடிவம்
எடுத்த; ஆலம் அனைய மேனியர் - விடம் போன்ற உடம்பைப்
பெற்றவர்கள்; பாலம் தரித்தவன் - மழுவைத் தரித்த சிவபிரானும்; வெருவும்
-
அஞ்சும் படியான; பான்மையர் - இயல்பைப் பெற்றவர்கள்.

     தோமரம் -இருப்புலக்கை தோட்டி - (யானையை அடக்கும்) அங்குசம்,
கப்பணம் - யானை நெரிஞ்சி முள் போன்ற ஆயுதம். யானைகள் வராதபடி
இது போர்க்களத்தில் பரப்பப் பெறும். கப்பணம் சிதறினானே என்பர் தேவர்
(சிந்-285) மதுரைக் காஞ்சி இதைப் பரல் என்று கூறும் 597, 98) பாலம் - மழு.
பரசு --- பாலம் என்றைந்தும் மழுவின் பெயரே. (திவாகரம் - செயற்கை 3)
பாலம் - கபாலம். முதற்குறை என்பர் (அடை - பதி) கபாலம் தரித்தவன்
வைரவ மூர்த்தி.                                            (58)