5127.

கரி, பரி,வேங்கை, மாக் கரடி, யாளி, பேய்,
அரி, நரி, நாய்என அணி முகத்தினர்;
வெரிந் உறுமுகத்தினர்; விழிகள் மூன்றினர்;
புரிதருகொடுமையர்; புகையும் வாயினர்.*

(அரக்கிகள்)

     கரிபரி வேங்கை- யானை,குதிரை, வேங்கைப்புலி; மாக் கரடி
யாளிபேய் -
பெருங்கரடி, யாளி, பேய்; அரி நரி நாய் என - சிங்கம், நரி,
நாய் என்று கூறும்படி; அணி - (தங்கள் இயல்புக்கேற்ப) பொருந்திய;
முகத்தினர் -
முகத்தையுடையவர்கள்; வெரிந் உறு - முதுகில் அமைந்த;
முகத்தினர் -
முகத்தை உடையவர்கள்; விழிகள் மூன்றினர் - மூன்று
கண்களையுடையவர்கள்; புரி தரு கொடுமையர் - விரும்பி மேற் கொண்ட
கொடிய இயல்பை உடையவர்கள்; புகையும் வாயினர் - புகையை
வெளிப்படுத்தும் வாயைப் பெற்றவர்கள்.                          (59)