5128.

எண்ணினுக்குஅளவிடல் அரிய ஈட்டினர்,
கண்ணினுக்குஅளவிடல் அரிய காட்சியர்,
பெண் எனப்பெயர் கொடு திரியும் பெற்றியர்,
துண்ணெனத் துயில்உணர்ந்து, எழுந்து சுற்றினார்.

     எண்ணினுக்கு -மனத்தினாலும்; அளவிடல் அரிய - அளவிட
முடியாத; ஈட்டினர் - வலிமையுடையவர்கள்; கண்ணினுக்கு அளவிடல்
அரிய -
கண்களாலும் அளக்கமுடியாத; காட்சியர் - தோற்றத்தை
உடையவர்கள்; பெண் எனப் பெயர் கொடு - பெண் என்ற பெயரை
வைத்துக் கொண்டு; திரியும் பெற்றியர் - இயல்பு திரிந்த
இயல்பையுடையவர்கள்; துண் என - (காண்பவர்)
 நடுங்கும்படி;
துயில்உணர்ந்து -
உறக்கத்திலிருந்து விழித்து; எழுந்து சுற்றினார் - எழுந்து
பிராட்டியைச் சுற்றினார்கள்.

    துண் என.விரைவாக என்றும் கூறலாம். எண்ணினுக்கு - கணக்கினாலும்
என்றும் கூறலாம். 4 - ஆம் வேற்றுமை கருவிப் பொருளில் வந்தது. (இலக் -
விள - வேற்றுமை)                                           (60)