5132. | 'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் ! மடக் கொடிசீதையாம் மாதரேகொலாம் ? கடல் துணை நெடியதன் கண்ணின் நீர்ப் பெருந் தடத்திடைஇருந்தது ஓர் அன்னத் தன்மையாள். |
கடல் துணை நெடிய- கடல்போலப் பரந்துள்ள; தன் கண்ணின் நீர்- தன்னுடைய கண்ணிலிருந்து வழிந்த நீர் நிரம்பிய; பெருந் தடத்து இடை- பெரிய தடாகத்தின் நடுவில்; இருந்தது - இருந்த; ஓர்அன்னத் தன்மையள் - ஒப்பற்ற அன்னத் தன்மை கொண்டவள்; கடக்க அரும் - கடந்து போக முடியாத; அரக்கியர் - அரக்கிகளின்; காவற் சுற்றுளாள் - காவற் சுற்றிலே அகப்பட்டுள்ளாள் (ஆதலால், இவள்); மடக்கொடி - இளங்கொடி போன்ற; சீதை ஆம் - சீதையாகிய; மாதரே கொல்? - பெண்ணே போலும். கொல் என்பதைஅசையாக்கி மாதரே ஆம் என்று பொருள் கொள்வாரும் உளர் அடுத்துவரும் பாடல்தான் அனுமனின் ஐயத்தைப் போக்குகிறது. (64) |