5143. | தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக் கருமமேகாத்ததோ? கற்பின் காவலோ ? அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ? ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ? |
(பிராட்டியின்தவத்தை) தருமமேகாத்ததோ - தருமமே பாதுகாத்ததோ ? சனகன் - சனகனுடைய; நல்வினைக் கருமமே - நல்லூழால் செய்யப்பெற்ற செயல்; காத்ததோ - பாதுகாத்ததோ ? கற்பின் காவலோ - கற்பினுடைய பாதுகாப்பா? (இத்தவம்) அருமையே அருமையே - அருமையானது அருமையானது;இது - இப்படிப்பட்ட தவத்தை; யார் ஆற்றுவார் - எவர்கள் செய்வார்கள் ?(இத்தவம்); ஒருமையே - ஒப்பற்றசிறப்புடையது; எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ - எம் போன்றவர்கள் சொல்லும் தன்மை உடையதோ. (75) |