5174.

'நோற்கின்றார்களும், நுண் பொருள் நுண்ணிதின்
பார்க்கின்றாரும், பெறும் பயன் பார்த்தியேல்,

வார்க்குன்றா முலை ! என் சொல், மவுலியால்
ஏற்கின்றாரொடுஉடன் உறை இன்பமால்.

     வார்குன்றா முலை! - கச்சினுள் அடங்காத தனம் பெற்றவளே !
நோற்கின்றார்களும் - தவம்புரி பவர்களும்; நுண்பொருள் - நுட்பமான
தத்துவங்களை; நுண்ணிதின் - சூட்சுமமாக; பார்க்கின்றார்களும் -
ஆராய்பவர்களும்; பெறும் பயன் - அடையும் பயனை; பார்த்தியேல் -
ஆராய்ந்து பார்த்தால்; என் சொல் -  என்னுடைய கட்டளையை; மவுலியால்
-
கிரீடத்தினாலே; ஏற்கின்றாரோடு - ஏற்றுக் கொள்ளும் தேவருடன்;உடன்
உறை -
கூடி வாழும்; இன்பம் - இன்பம்ஆகும்.

     இன்பமால் -இதில் உள்ள ஆல் அசை. இந்தக் கவிக்குப் பொருள்,
தவம் பண்ணுவோரும் சகல நூல்களைத் தெரிவோரும், பெறும் பயன் தங்களை
எல்லோரும் வந்து வணங்க வேண்டும் என்பது. அப்படி செய்யாதிருக்கையிலே
நான் நல்லவார்த்தை சொல்லித் தலையால் இரக்கச் செய்தேயும் ஏன் கிருபை
பண்ணுகின்றிலீர் என்பது பழைய உரை (அடை-பதி) உடன் உறைதல் -
ஒருங்கே வாழ்தல். "உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்" (சிலம்பு 13
- 83)                                                     (106)