5175.

'பொருளும், யாழும், விளரியும், பூவையும்,
மருள, நாளும்,மழலை வழங்குவாய் !
தெருளும் நான்முகன் செய்தது, உன் சிந்தையின்
அருளும், மின்மருங்கும், அரிது ஆக்கியோ ?

     பொருளும் -குழந்தைகளும்; யாழும் - யாழும்; விளரியும் -
விளரிப்பண்ணும்; பூவையும் - நாகணவாய்ப் பறவையும்; மருள -
ஏக்கமடைய; நாளும் - தினமும்; மழலை வழங்குவாய் - மழலை மொழி
பேசுபவளே ! தெருளும் - தெளிவடைந்த; நான்முகன் - பிரம்மதேவன்; உன்சிந்தையில் - உன் உள்ளத்தில்; அருளும் - கருணையையும்; மின்
மருங்கும் -
மின்னல் போலும் இடையும்; அரிது ஆக்கியோ - இல்லாமல்
ஆக்கிய பிறகோ; செய்தது - படைத்தது.

    பொருள் -குழந்தை. 'தம் பொருள் என்ப தம் மக்கள்' (குறள்.63)
சுந்தரமூர்த்திசுவாமிகள் சுவை நயம் மிக்க கலய நல்லூர்ப் பதிகத்தில்
"பெரும்பலம துடை அசுரன் தாரகனைப் பொருது -  பொன்று வித்த
பொருளினை முன் படைத்து கந்த புனிதன்" என்றார் (திருமுறை 7. 16-9)
அரிது - என்பது இன்மைப் பொருள் தந்தது. 'அருங்கேடன்' என்பது

அறிக. என்னும் குறளின்(210) குறிப்பில் அருளும் இன்மை என்று அழகர்
எழுதுகிறர். "ஈயா மாக்கள் தீ மொழி கவர்ந்த சிற்றிடை" என்பர் குமரகுருபரர்.
                                                         (107)