5259.

'எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன; உலகம்
                           எல்லாம்
தழுவி நின்றுஎடுப்ப; வேலை தனித் தனி கடக்கும்
                           தாள;
குழுவின, உம்கோன் செய்யக் குறித்தது குறிப்பின்
                           உன்னி,
வழு இல,செய்தற்கு ஒத்த - வானரம் வானின்
                           நீண்ட.

     உம்கோன் -உம்தலைவனான இராமபிரான்; செய்யக் குறித்தது -
செய்யவேண்டும் என்று நினைத்ததை; குறிப்பின் உன்னி - குறிப்பால்
ஆராய்ந்து; வழு இல - குற்றம் இல்லாமல்; செய்தற்கு ஒத்த - செய்வதற்கு
உடன்பட்டுள்ள; வானரம் -  குரங்குகள்; எழுபதுவெள்ளம் கொண்ட -
எழுபது வெள்ளம் என்னும்; எண்ணன - தொகையைப் பெற்றன; உலகம்
எல்லாம் -
எல்லா உலகங்களையும்; தழுவி நின்று எடுப்ப - அணைத்து
நின்று சுமப்பன; வேலை - கடல்களை; தனித்தனி - பிறர் உதவியில்லாமல்
தனித்தனியாக; கடக்கும் தாள - தாண்டும் பாதங்களை உடையன; குழுவின
-
கூடியிருப்பன; வானின் நீண்ட - ஆகாயம் போல் பரவியுள்ளன.

     எண்ணன, தாள,என்பன குறிப்பு முற்றுகள். அவை வானரம் என்னும்
எழுவாய்க்கு உரியன. செய்தற்கு ஒத்த என்பதை எச்சம் ஆக்காமல்
முற்றாக்கியும் கூறலாம். அப்போது ஒத்த என்பது ஒன்றுபட்டிருப்பன என்னும்
பொருள் தரும். வெள்ளம் - பேரெண்.                          (32)