5267.

'தளம் கெழு கற்பக முகிழும், தண் துறை
இளங் கொடிப்பவளமும் கிடக்க; என் அவை ?
துளங்கு ஒளிவிரற்கு எதிர், உதிக்கும் சூரியன்
இளங் கதிர்ஒக்கினும் ஒக்கும் - ஏந்திழாய் !

     ஏந்திழாய் -ஆபரணங்களையுடையவளே; (விரலுக்குச் சமம் என்று
பேசப்படும்) தளம்கெழு - இதழ்களைப் பெற்றுள்ள; கற்பக முகிழும் - கற்பகஅரும்பும்; தண்துறை - குளிர்ந்த கடலின் துறைகளில் உள்ள;
இளங்கொடிப்பவளமும் -
இளைய பவளக் கொடியும்; கிடக்க -
கிடக்கட்டும்; அவை -அந்த முகிழும் பவளமும்; என் - என்ன பொருள்;
துளங்கு ஒளி -
அசையும் ஒளியுடன் கூடிய; விரற்கு எதிர் - பெருமானின்
திருவிரலுக்கு,
எதிராக; உதிக்கும்சூரியன் - தோன்றும் நிலையில் உள்ள
சூரியனின்; இளங்கதிர் - இளமைப் பொலிவுடைய கதிர்கள்; ஒக்கினும்
ஒக்கும் -
ஒத்தாலும் ஒத்திருக்கும்.

    கிடக்க, என்,என்பவை இகழ்ச்சியைக் குறிக்கும். சேனை கிடக்கிடு'
என்று குகன் பேசினான். ஏஏ, சீச்சீ எல்என் இகழ் மொழி' என்று பிங்கலம்
பேசும் (பிங்கலம் 2105) விரல் பவளம்... ஒப்பாம் என்று உவமான சங்கிரகம்
பேசும் (74) ஒக்கினும் ஒக்கும் - ஒத்திருக்கும். இயங்கலும் இயங்கும்
மயங்கலும் மயங்கும் என்பது போல் வந்தது. (சிலம்பு 22 - 154) ஏந்திழை,
பெண் என்னும் பொருள் தந்தது. புனையா ஓவியம் போன்ற
மணிமேகலையைச் சாத்தனார் அணியிழை, ஆயிழை என்றார். இம்மரபு
உணராது இடர்ப்பட்டார் உளர். விரல் இளங்கதிர் என்றதனால் திருவடி
சூரியன் என்க. நம்மாழ்வார் 'திருப்பாதம்' இளநாயிறு இரண்டு போல் ஒளி
உள்ளவா (திருவாய் 8-5-5) என்றார். ஆழ்வார் நினைந்ததைக் கம்பர்
வரைந்தார்.                                               (40)