527.

'நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !' என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை
                                    நோக்கி,
நாயகற்கு இளையகோவும். 'நன்று' என அவன்தன்
                                 தோள்மேல்,
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது
                                 அன்றே.

     இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல்.       (49-3)