5277. | ' "கடற் படு பணிலமும், கன்னிப் பூகமும், மிடற்றினுக்குஉவமை" என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு உடன்பட ஒண்ணுமோ- உரகப் பள்ளியான் இடத்து உறைசங்கம் ஒன்று இருக்க, எங்களால் ? |
உரகப்பள்ளியான் - பாம்புப் படுக்கையில்உள்ள திருமாலின்; இடத்துஉறை - இடக்கரத்தில் இருக்கும்; சங்கம் ஒன்று இருக்க - பாஞ்சசன்யம்ஏற்புடையதாக இருக்க; (அதை விட்டுவிட்டு) கடல்படு பணிலமும் - கடலில்தோன்றிய சங்கும்; கன்னிப் பூகமும் - இளமையான கமுகமரமும்;மிடற்றினுக்கு உவமை என்று - கழுத்துக்கு உவமை என்று; உரைக்கும்வெள்ளியோர்க்கு - கூறும் அறிவற்றவர்களுக்கு; எங்களால் - அறிவுடையஎங்களால்; உடன்பட ஒண்ணுமோ - உடன்பட்டுப் பேச முடியுமா. பணிலம் - சங்கு. பூகம்- பாக்குமரம். வெள்ளியோர் - அறிவற்றவர். உரகப்பள்ளி - பாம்புப் படுக்கை. உரகமெல் அணையான் கையில் உறைசங்கம் (பெரியாழ்வார் 4-4-4) இராமபிரான் மிடற்றுக்குத் திருமால் ஏந்திய சங்கமே உவமை. பிற உவமையாகா. (50) |