5312.

' "போது ஆயினபோது, உன தண் புனல் ஆடல்
                               பொய்யோ ?
சீதா, பவளக்கொடி அன்னவள்-தேடி, என்கண்
நீ தா;தருகிற்றிலையேல், நெருப்பு ஆதி !" என்னா,
கோதாவரியைச்சினம் கொண்டனன், கொண்டல்
                               ஒப்பான்.

     கொண்டல்ஒப்பான் - மேகம் போன்றஇராமபிரான்; கோதாவரியை
-
கோதாவரியைப் பார்த்து (நதியே); போது ஆயின போது - சூரியன்
உதிக்கும் சமயத்தில்; பவளக்கொடி அன்னவள் சீதை - பவளக்கொடி
போலும் சீதை; உன தண்புனல் - உன்னுடைய குளிர்ந்த நீரில்; ஆடல்
பொய்யோ -
நீராடியது பொய்யா; அன்னவள் தேடி - அவளைத் தேடிக்
கொண்டு வந்து; என்கண் நீ தா -  என்னிடம்கொடுப்பாயாக;
தருகிற்றிலையேல் -
தாராமல் போவாய் என்றால் (நீ); நெருப்பு ஆதி
என்னா -
நெருப்பு மயமாகி விடுவாய் என்று கூறி; சினம் கொண்டான் -
சீற்றம் கொண்டான்.

     போது - சூரியன்.போதும் வைகிற்றுப் போம் இடம் வேறு இலை
என்பர் சேக்கிழார் (இளையான்குடி) போதும் சென்றது குடபால் (வனம்புகு 19)
                                                         (85)