| 5324. | 'சுருங்கு இடை ! உன் ஒரு துணைவன் தூய தாள் ஒருங்குடைஉணர்வினோர், ஓய்வு இல் மாயையின் பெருங் கடல்கடந்தனர் பெயரும் பெற்றிபோல், கருங் கடல்கடந்தனென், காலினால்' என்றான். |
சுருங்கிடை -சுருங்கியஇடையை உடைய தாயே; உன் ஒரு துணைவன் - உன் ஒப்பற்ற நாயகனின்; தூய தாள் - தூய திருவடியில்; ஒருங்கு அடை - ஒன்றுபட்டு அடைந்த; உணர்வினோர் - பேரறிவு பெற்ற ஞானிகள்; ஓய்வு இல் - ஓய்ந்து போதல் இல்லாத; மாயையின் பெருங்கடல் - மாயையாகிய பெருங்கடலை; கடந்தனர் - தாண்டி; பெயரும் பெற்றி போல் - நீங்கும் தன்மையைப் போல (அடியேன்); காலினால் - கால்களால்; கருங்கடல் - கரிய கடலைக்; கடந்தனென் - கடந்து வந்தேன்; என்றான் - என்று கூறினான். கால் - பிராணசக்தி என்று கூறுவாரும் உளர். (97) |