5328. | ஒத்து உயர்கனக வான் கிரியின் ஓங்கிய மெய்த் துறுமரம்தொறும் மின்மினிக் குலம் மொய்த்துஉளவாம் என, முன்னும் பின்னரும், தொத்தின்தாரகை, மயிரின் சுற்று எலாம். |
உயர் கனகவான்கிரியின் - சிறந்த பொன்மயமானமகாமேருமலையில்; ஒத்து - ஒன்றுக்கொன்று சமமாகி; ஓங்கிய - வளர்வதற்காக; துறுமெய் -நெருங்கிய வடிவத்தை உடைய; மரந்தொறும் - மரங்கள் தோறும்; மின்மினிக்குலம் - மின்மினிக் கூட்டம்; மொய்த்து உளவாம் என - நருங்கியிருப்பதைப் போல; தாரகை - நட்சத்திரங்கள்; மயிரின் சுற்றுஎலாம் - (விசுவ ரூபம் எடுத்த) அனுமனின் மேனியில்; முன்னும் பின்னரும்- உள்ள மயிர்களின் சுற்றிடங்களில் எல்லாம் முன்னாலும் பின்னாலும்;தொத்தின் - தொத்திக் கொண்டிருந்தன. மின்மினிக்குலம்என தாரகை தொத்தி்ன என்று முடிக்க அண்ணல் மேனி மேரு. மயிர். மரம். நட்சத்திரம் மின்மி்னி என்க தொறும் பன்மைப் பொருள் உணர்த்தி வந்தது. இடைச் சொல் 'நவில் தொறும் நூல் நயம்' (குறள். 783) என்பது தமிழ்மறை. மெய் - வடிவம். 'மானவன் மெய் இறை மறக்கலாமையின்' (கம்க. 3636) (101) |