5347.

'பொன் திணி பொலங்கொடி ! என் மென் மயிர்
                                பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க;
துயர் விட்டாய்,
இன் துயில்விளைக்க;ஓர் இமைப்பின், இறை
                                வைகும்
குன்றிடை, உனைக்கொடு குதிப்பென்;
இடை
                                கொள்ளேன்.

     திணிபொன் -செறிந்தஅழகையுடைய; பொலங்கொடி - தங்கக்
கொடிபோலும் அம்மையே (நீ); மென்மயிர் - மென்மையான மயிர்;
பொருந்தித்துன்றிய -
அமைந்து நெருங்கிய; என் புயத்து - என் புயத்தின்
கண்ணே;இனிது இருக்க - அமைதியாக இருக்க (அதனால்); துயர் விட்டாய்
-
துன்பத்தை விட்டவளாவாய் (அப்போது); இன்துயில் விளைக்க - (உனக்கு)
இனிய உறக்கம் உண்டாக; உனைக் கொடு - உன்னைச் சுமந்து கொண்டு;
இறைவைகும் -
இராமபிரான் தங்கியுள்ள; குன்றிடை
 ஓர் இமைப்பின்
குதிப்பென் -
மலையில் ஓர்இமைக்கும் நேரத்தில் குதிப்பேன்; இடை
கொள்ளேன் -
நடுவில் தாமதம் செய்யேன்.

     பொன் என்பதற்குப் பசப்பு என்றும் கூறலாம் (சிந்தாமணி 1530) இடை
கொள்ளேன் என்பதற்குத் தளர்ச்சியடையேன் என்றும் பொருள் கூறலாம்.
இமைப்பு - கண்ணிமைக்கும் நேரம். இமைப்பின் எய்திட்டு (சிந்தா 1680)
இராமபிரான் தங்கிய மலை பிரஸ்ரவனம்.                           (3)