5393.

'கோள் ஆனார் உயிர் கோளோடும்,
மூளா வெஞ்சினம், முற்று ஆகா;
மீளாவேல், அயல்வேறு உண்டோ ?
மாளாதோ புவிவானோடும் ?

     மூளா - காரணம் இல்லாமல்கிளர்ந்து எழாத; வெம்சினம் -
(இராமபிரானின்) கொடுங்கோபம்; கோள் ஆனார் உயிர் - கோள் போலும்
அரக்கர்களின் உயிரை; கோளோடும் - பறித்தெடுப்பதுடனே; முற்று ஆகா -
நிறைவு பெறாது; மீளாவேல் - அவர் சீற்றம் திரும்பி இராமபிரான் பால்
ஒடுங்காவிடின்; புவி - மண்ணுலகம்; வானோரும் - விண்ணுலகுடன்;
மாளாதோ - அழியாதோ; அயல் - பக்கத்தில்; வேறு உண்டோ - வேறு
பொருள் அழியாமல் இருக்குமா ?.

     கொள்ளுதல் -பற்றுதல் (பறித்தல்) கொள், கோள் ஆயிற்று,
கோளானோர் - என்பதற்குக் கொலை செய்பவர் என்றும் தீயோர் என்றும்
பொருள் கூறலாம். கோள் எங்ஙனம் உலகத் தீமையை விளைவிக்குமோ
அதுபோல் அரக்கர்கள் தீமையை விளைவிப்பார்கள். கோள் என்றது தூமகேது
முதலியவற்றை. தீக்கோள் எனினும் அமையும். 'கோள் ஆகி வந்தவா கொற்ற
முடி' (கம்ப. 1707) என்று முன்பு பேசப் பெற்றது.                   (49)