5396.

'சி்ல் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின்,எல்லோரும்
நல் நாள்காணுதல் நன்று அன்றோ-
உன்னால் நல்அறம் உண்டானால் ?

     நீ - (கருணை வடிவான)நீ; சில்நாள் - சிலநாட்கள்; இடர் தீராதாய்
-
துன்பம் விலகாமல் (சிறையில்); இன்னா வைகலின் - வருத்தத்துடன்
தங்குவதால்; நல்நாள் காணுதல் - நல்ல நாளைக் காண்பதானது; நன்று
அன்றோ -
சிறந்ததல்லவா (அன்றியும்); உன்னால் - சிறையிருக்கும்
உன்னாலே; நல் அறம் - சிறந்த அறங்கள்; உண்டானால் - உயிர்தரித்து
வாழுமானால்.

     பிராட்டி, உலகம்வாழத் தவம் செய்தாள். அதனால் உலகு விடுதலை
பெற்றது. தேவதேவனுடைய பட்டத்துத் தேவியான தன்னுடைய பெருமையும்,
சிறையிருத்தலின் தண்மையும் பாராதே, தேவ மாதர்களுடைய சிறையை
விடுவித்தற்காகத்தான் சிறையிருந்தது பேரருளின் வசப்பட்டவளாய் அன்றோ.
குழவி கிணற்றில் விழுந்தால்  ஒக்கக் குதித்து எடுக்கும்தாயைப் போல,
இவ்வுயிர்கள் விழுந்த பிறவிப் பெருங்கடலில் தானும் ஒக்கவந்து பிறந்து,
இவர்கள் பட்டதைத் தானும் பற்றுகையாலே, ஒரு காரணம்பற்றி வாராத
தாயாகிற சம்பந்தத்தால் வந்த அன்புக் குணத்திற்கும், இது ஒரு விளக்கமாகும்,
என்னும் சான்றோர் உரையை இங்கே நினைக்கவும் (ஸ்ரீ வசன பூஷனம்
1.5.உரை) இராமாவதாரத் தத்துவம், பிராட்டி, சிறையிருத்தல் மூலமாகவே
நிலையுற்றதென்க. என்று அடை பதிப்பு விவரிக்கும்.                (52)