5397.

'புளிக்கும் கண்டகர் புண்ணீருள்
குளிக்கும் பேய்குடையும்தோறும்,
ஒளிக்கும் தேவர் உவந்து, உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ ?

     புளிக்கும் -(யாவரும்)வெறுப்படைகின்ற; கண்டகர் - முள்போலும்
அரக்கர்களின்; புண்ணீருள் - இரத்த வெள்ளத்தில்; குளிக்கும் பேய் -
நீராடும் பேய்கள் (அதனுள்); குடையும் தோறும் - முழுகும் போதெல்லாம்;
ஒளிக்கும் தேவர் -
(இக்காட்சியை) மறைவாயுள்ள தேவர்கள்; உள்ளம்
உவந்து -
மனம் மகிழ்ந்து; களிக்கும் - செருக்கடைகின்ற; நல்வினை -
நற்செயலை; காணாயோ - தோற்றுவிக்கமாட்டாயா.

     புளிக்கும் -வெறுப்பைத் தரும். ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
(குறுந் - 354) அடை - பதிப்பு. காண்டல் - உண்டாக்குதல். முனைவன்
கண்டது முதல் நூல் ஆகும். (தொல் - பொருள். 649) அடை - பதிப்பு.
குடைதல் - நீரில் மூழ்குதல். 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே'...என்று
திருப்பாவை பேசும். குளித்தல் - நீராடுதல்.                     (53)