5427.

'சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண்இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனதுஇன் உயிர் நல்கினை, நல்லோய் !
கோடி' என்றுகொடுத்தனள், மெய்ப் புகழ்
                            கொண்டாள்.்

     மெய்ப்புகழ்கொண்டாள் - உண்மையான புகழைப்பெற்ற பிராட்டி;
(அனுமனை நோக்கி) நாடிவந்து - விருப்பத்துடன் வந்து; எனது இன்உயிர்
நல்கினை -
என்னுடைய இனிய உயிரை
 வழங்கினாய்; நல்லோய் -
சிறந்தவனே (இஃது); சூடையின்மணி - சூடாமணியாகும்; கண்மணி ஒப்பது -
என்னுடைய கண்ணின் மணி போன்றது;தொல் நாள் - நீண்ட நாட்களாக;
ஆடையின் கண் இருந்தது - என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப்
பெற்றது; பேரடையாளம் - பெரிய அடையாளமாகும்; கோடி - (இதனை)
கொள்வாயாக; என்று - என்று கூறி (சூடாமணியை; கொடுத்தனள் -
(அனுமனிடம்) வழங்கினாள்.

     சூடாமணி என்பதுநடுவே ரத்தினம் பதிந்த வில்லை என்று திரிசிரபுரம்
மாகவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை வரைந்தார். சூடா என்னும் வடசொல்
சூடை என்று வந்தது. உறுசுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை' என்று பின்பு
பேசப் பெறும் (கம்ப. 5473)                                  (83)