அனுமன் அசோகவனத்தை அழித்தல் 5436. | என்றுநினையா, இரவி சந்திரன் இயங்கும் குன்றம் இருதோள் அனைய தன் உருவு கொண்டான்; அன்று, உலகுஎயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்; துன்று கடிகாவினை, அடிக்கொடு துகைத்தான். |
என்று நினையா -என்றுமனத்தில் எண்ணி; இரவி சந்திரன் இயங்கும் - சூரியனும் சந்திரனும் சுற்றி வலம் வருகின்ற; குன்றம் அனைய இரு தோள் - மேருமலையை ஒத்த இரண்டு தோள்களை உடைய; தன் உருவு கொண்டான் - தனது பெரிய வடிவை எடுத்துக் கொண்டு; அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் - முற்காலத்தில் பூமியைத்தன் பற்களின் இடையே கொண்ட வராக மூர்த்திக்கு ஒப்பவனாக விளங்கி;துன்றுகடி காவினை - மரங்கள் அடர்ந்த காவல்மிகுந்த அசோகவனத்தை;அடிக்கொடு துகைத்தான் - தனது கால்களால் தாக்கி மிதித்து அழித்தான். பிரளயத்திலிருந்து பூமிப் பிராட்டியை மீட்பதற்கு எழுந்த மகாவராக மூர்த்தி, அவள் அம்சமான பிராட்டியைத் துயர்க் கடலினின்றும் மீட்க எடுத்த அனுமனது பேருருவுக்கு உவமையாதல் பொருத்தம். இரண்டு மேரு மலைகள் இல்லை. இரு மேருவை ஒத்த தோள்கள் என்றது இல்பொருளுவமை. (8) |