| 5439. | சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர் ஆனை நுகரக்குளகும் ஆன; அடி பற்றா மேல் நிமிரவிட்டன, விசும்பின் வழி மீப் போய், வானவர்கள்நந்தன வனத்தையும் மடித்த. |
சுழற்றிய -அனுமனால்சுழற்றி எறியப்பட்ட; சோனை முதல் மற்றவை- மேகத்தைத் தம்மிடம் கொண்ட மற்றும் சில மரங்கள்; திசைப் போர்ஆனை நுகரக் குளகும் ஆன - எட்டுத்திக்குகளையும் காக்கும் போரில்சிறந்த யானைகள் உண்ணும் தழை உணவு ஆயின; அடி பற்றாமேல் நிமிரவிட்டன - அடியைப் பற்றி வானத்தில் செல்லும் படி வீசி எறியப்பட்ட சிலமரங்கள்; விசும்பின் வழி மீப் போய் - ஆகாய வழியாக மேலே சென்று;வானவர்கள் நந்தனவனத்தையும் மடித்த - தேவர்களது அழகிய பூஞ்சோலையையும் அழித்தன. சோனை - மேகம்;நந்தன வனம் - (இங்கே) கற்பகப் பூஞ்சோலை. (11) |