5443. | பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ, மின் திரிவஒத்தன; வெயில் கதிரும் ஒத்த; ஒன்றினொடும்ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின் தன் திரள்ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த. |
திசைகள் போவ -நான்குதிசைகளிலும் செல்லும்; பொன் திணி மரன்- பொன்னால் பதிக்கப்பெற்ற மரங்கள்; மின் திரிவ ஒத்தன - மின்னல்கள்திரிவனவற்றை ஒத்தன; மணிப் பருமரன் - இரத்தினங்களால் பதிக்கப் பெற்றமரங்கள்; வெயில் கதிரும் ஒத்த - சூரியனுடைய ஒளியையும் ஒத்திருந்தன;ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர - (அவ்வாறு வீசி எறியப்பட்டமரங்கள்) இடையே ஒன்றோடு ஒன்று தாக்கப்பட்டுத் தகர்ந்து தூளாகிக் கீழேஉதிரும்படி; ஊழின் - கற்பமுடிவில்; தன் திரள் ஒழுக்கின் விழும்தாரகையும் ஒத்த - கூட்டமாக விழும் நட்சத்திரங்கள் போலவும் விளங்கின. பொன் மரங்களும்இரத்தின மரங்களும் அச் சோலையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன போலும். (15) |