5445.

தூவியமலர்த்தொகை சுமந்து, திசைதோறும்
பூவி்ன் மணம்நாறுவ, புலால் கமழ்கிலாத,
தேவியர்களோடும்உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய,திரை ஆர்கலிகள் அம்மா !

     தூவிய மலர்த்தொகை சுமந்து - சிதறின மலர்களின்கூட்டங்களைத்
தாங்கி; திசை தோறும் பூவின் மணம் நாறுவ - எங்கும் மலர்களின் மணமேவீசுவன; (அதனால்); புலால் கமழ்கிலாத - புலால் நாற்றம் வீசாமல்
அடங்கியுள்ளனவான; திரை ஆர்கலிகள் - அலைகளை உடைய கடல்கள்;
உயர் தேவர் தேவியர்களோடு இனிது ஆடும் -
உயர்ந்த தேவர்கள் தம்
மனைவிமார்களுடன் மகிழ்வோடு நீராடுகின் ற; ஆவி எனல் ஆய -
(தாமரைப் பூக்களோடுகூடிய) பொய்கை என்று சொல்லத் தக்கனவாயின.

    ஆர்கலிகள்(கடல்கள்) தேவருலகில் உள்ள பூம் பொய்கை போல்
விளங்கின. கடல்களில் விழுந்த மலர்த்தொகையின் மிகுதி
உணர்த்தப்பெறுகின்றது. ஆவி - பொய்கை. அம்மா; வியப்பு இடைச்சொல்.
                                                      (17)