5450.

சாகம் நெடுமாப் பணை தழைத்தன; தனிப் போர்
நாகம் அனையான்எறிய, மேல் நிமிர்வ-நாளும்
மாக நெடு வானிடைஇழிந்து, புனல் வாரும்
மேகம் எனல்ஆய-நெடு மா கடலின் வீழ்வ.

     தனிப் போர்நாகம் அனையான் எறிய - ஒப்பற்ற  போரில்சிறந்த
யானை போன்ற வலிமை பெற்ற அனுமன் வீசி எறிந்ததனால்; நெடு மாப்
பணை சாகம் தழைத்தன -
நீண்ட பெரிய கிளைகளும் இலைகளும்
தழைத்தனவும்; மேல் நிமிர்வ - மேலே எழுந்து விளங்குவனவும்; நெடு
மாகடலின் வீழ்வ -
பிறகு நெடிய பெரிய கடலில் வீழ்வனவுமாகிய மரங்கள்;
நாளும் -
எல்லாக் காலத்தும்; நெடு மாக வான்  இடை கிழிந்து - மிகப்
பெரிய ஆகாயத்திலிருந்து கீழே இறங்கி; புனல் வாரும் மேகம் எனல் ஆய
-
கடல் நீரை முகப்பனவான மேகம் என்று சொல்லத்தக்கன வாயின.

     மாகம் - வானம்;மாக வான் - ஒரு பொருட் பன்மொழி.       (22)