5455.

காமரம்களி வண்டு கலங்கிட,
மா மரங்கள்மடிந்தன, மண்ணொடு;
தாம், அரங்கஅரங்கு தகர்ந்து உக,
பூ மரங்கள்எரிந்து பொரிந்தவே.

     காமரம் களிவண்டு கலங்கிட - காமரம் என்னும்பண்ணைப் பாடும்
களிப்புள்ள வண்டுகள் கலக்கம் அடைய; மா மரங்கள் மண்ணொடு
மடிந்தன -
பெரிய மரங்கள் தரையோடு மடிந்து கீழே விழுந்தன;
அரங்குதாம் - நாடக சாலைகள்; அரங்க(த்)தகர்ந்து உரி - அழியுமாறு
முறிந்து கீழே விழ; பூமரங்கள் எரிந்து பொரிந்த - மலர்களை உடைய
பலமரங்கள் எரிந்து பொரிந்து சாம்பலாய்ப் போயின.

     அரங்கல் -அழிதல்; அரங்கு - மேடை.                   (27)