5458.

பறவைஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக்குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்துஎழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும்கைம்மிகப் போயதே.

     பறவை ஆர்த்துஎழும் ஒசையும் - (அந்த வேளையில்)பறவைகள்
பெருங்கூச்சலிட்டு எழுகின்ற ஓசையும்; பல் மரம் இற எடுத்த இடிக் குரல்
ஓசையும் -
பலமரங்கள் ஓடிபட அதனால் உண்டான இடியின் ஒலி போன்ற
ஓசையும்; அறவன் ஆர்த்து எழும் ஓசையும் - அறத்தின் உருவினனான
அனுமன் ஆரவாரித்தலால் உண்டான ஓசையும்; அண்டத்தின் புற
நிலத்தினும் கை மிகப் போயது -
இவ்வுலக உருண்டையின் வெளி
நிலத்தினைக் கடந்து போயிற்று.

     அறவன் - அனுமன்(அறத்தின் வடிவினன்)                 (30)