5462. | சிந்துவாரம் திசைதொறும் சென்றன, சிந்து வார் அம்புரை திரை சேர்ந்தன; தந்து, ஆரம்,புதவொடு தாள் அற, தம் துவாரம்துகள் பட, சாய்ந்தவே. |
சிந்து வாரம்திசை தொறும் சென்றன - (அனுமன் வீசிஎறிந்ததனால்)கரு நொச்சிமரங்கள் நான்கு திக்குகளிலும் சென்றனவாய்; சிந்து வார்அம்புரை - கடலின் நீண்ட அழகிய உயர்ந்த; திரை சேர்ந்தன - அலைகளில் சேர்ந்தன; ஆரம் - (அன்றியும்) சந்தன மரங்கள்; தம் துவாரம் புதவொடு தாள் அற தந்து - தமது வாயில்களின் கதவும் தாழ்ப்பாள்களும் முறிந்து போம்படி (மாளிகைகள் மேல்) வீசி எறியப்பட்டு; துகள் படச் சாய்ந்தன - (அவைகள்) தூளாகும்படிச் சாய்ந்து விழுந்தன. சிந்து வாரம் -கரு நொச்சி; சிந்து - கடல்; ஆரம் - சந்தன மரம்; புதவு - கழிவு; தந்து - எறியப்பட்டு. (34) |