| 5463. | நந்தவானத்து நாள் மலர் நாறின, நந்த, வானத்துநாள் மலர் நாறின; சிந்து அவ்வானம் திரிந்து உக, செம் மணி சிந்த, வால்நந்து இரிந்த, திரைக் கடல். |
நந்த வானத்துநாறின நாள்மலர் - அசோகவனம் என்னும் பூஞ்சோலையில் மணம் வீசிய அன்று அலர்ந்த மலர்கள்; வானத்து நந்த மலர் நாள் நாறின - ஆகாயத்தில் மிகுதியாக விளங்குகின்ற நட்சத்திரங்கள் போல விளங்கின; சிந்து திரிந்து அவ் வானம் உக - புளிய மரங்கள் (ஆகாயத்தில்) சுழன்று, (சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட) அந்தக் கடலிலே விழ; வால் நந்து - வெண்மையான சங்குப் பூச்சிகள்; திரை கடல் - அலைகளை உடைய கடலில்; செம்மணி சிந்த இரிந்த - (தமது கர்ப்பத்தில் உள்ள) அழகிய முத்துக்கள் சிந்தும் படி நிலை கெட்டு ஓடின. நந்த வானம் எனஇடையில் எழுத்து நீண்டது. காண்டா வனம். ஆச்சிராமம் என்பன போல. நாறுதல் - மணத்தல் -(1) விளங்குதல் (2) சிந்து - புளியமரம்; வானம் - பறித்த குழி. (35) |