5466. | மயக்கு இல்பொன் குல வல்லிகள், வாரி நேர் இயக்குறத்திசைதோறும் எறிந்தன, வெயில்கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன, புயல் கடல்தலைபுக்கன போல்வன. |
வாரி நேர்இயக்கு உற - கடலுக்கு நேராகச்சென்று விழும்படி; திசைதொறும் எறிந்தன - எல்லாத்திக்குகளிலும் எறியப்பட்டனவாகிய; மயக்கு இல்பொன் குல வல்லிகள் - ஒளி மழுங்குதல் இல்லாத பொன் மயமானகூட்டமாக உள்ள கொடிகள்; வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன -சூரிய கிரணங்களின் தொகுதி அறுபட்டு (பூமியில்) பொருந்தி வீழ்ந்தனவாகி;புயல் கடல் தலை பூக்கன போல்வன - மேகங்கள் படிகின்ற கடலினிடத்துப்புகுந்தனவற்றை ஒப்பனவாயின. அனுமன் வீசிஎறிந்ததால் கடலில் விழுந்த பொற்கொடிகளின் தொகுதி, அறுபட்டு, கடலில் புக்க சூரிய கிரணக் கற்றை போல விளங்கின. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. (38) |