விலங்கு மற்றும்பறவைகளின் நிலை 

5470.

கதறினவெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு;
                                 கண்கள்
குதறின பறவை,வேலை குளித்தன; குளித்திலாத
பதறின; பதைத்த;வானில் பறந்தன; பறந்து பார்
                                வீழ்ந்து
உதறின, சிறையை;மீள ஒடுக்கின உலந்து போன.

     விலங்கு வெருவிக்கதறின - அசோகவனத்திலிருந்த மிருக இனங்கள்
அச்சத்தால் வீறிட்டுக் கத்தின; உள்ளம் கலங்கின - மனக்கலக்கம்
அடைந்தன; கண்கள் குதறின - கண்கள் புண்ணாகிப் பொங்கின; பறவை
வேலை குளித்தன -
அங்கிருந்த பறவை இனங்கள் கடலில் வீழ்ந்து
ஆழ்ந்தன; குளித் திலாத பதறின - அவ்வாறு வீழாத பறவைகள்; பதைத்த
வானில் பறந்தன -
மிகவும் துடித்து, பதறினவாய்; பறந்து பார் வீழ்ந்து
சிறையை உதறின -
சிறிது தூரம் பறந்து (மேலே பறக்கமுடியாமல்) பூமியில்
விழுந்து சிறகுகளை உதறிக் கொண்டன; நீள ஒடுக்கின உலந்து போன -
ஒடுக்கிக் கொண்டனவாய் அழிந்து போயின.

     அனுமன்அசோகவனத்தை அழித்ததால் அங்கிருந்த மிருகங்களும்
பறவைகளும் அச்சத்தால் அடைந்த செயல்கள் கூறப்பெற்றன. பறவைகள்
சிறகுகளை உதறுவது இறக்குமுன் நிகழ்ந்த சாவுக்கு அறிகுறியாகும். இப்பாடற்
செய்திகளை அனுமன் மயேந்திர மலையில்
 காலை ஊன்றிஎழுந்தபோது
நிகழ்ந்த செய்திகளோடு (4758 - 4762; குறிப்பாக 4759) ஒப்பிடுக.      (42)