5479.

பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி, புதிய பால்
                         பொழிவது ஒக்கும்
திங்களைநக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன,
அம் கைபத்து-இரட்டியான்தன் ஆணையால்,
                        அழகு மாணப்
பங்கயத்துஒருவன்தானே, பசும் பொனால் படைத்தது
                         அம்மா !

     நெடு நாள் -பலநாட்கள் (பதினைந்து நாட்கள்); பொங்கு ஒளி ஈட்டி- மேன்மேலும் விஞ்சி வருகின்ற ஒளியை, சம்பாதித்து; புதிய பால்
பொழிவது ஒக்கும் திங்களை -
புதிய பாலைச் சொரிவது போன்ற (நிலாவை
வீசுகின்ற) சந்திரனையும்; நக்குகின்ற இ்ருள் எலாம் வாரித்தின்ன -
தீண்டுவதான (களங்கம் எனப்படுகின்ற) இருட்டு முழுவதையும்
அள்ளித்தின்னும் பொருட்டு (போக்கும்படி); அம்கை பத்து இரட்டியான் தன்
ஆணையால் -
அழகிய இருபது கைகளை உடைய இராவணனது
கட்டளையினால்; பங்கயத்து ஒருவன் தானே - தாமரை மலர் மீது விளங்கும்பிரம்ம தேவனே; அழகு மான - அழகு பொருந்தும்படி; பசும்
பொனால்படைத்தது அம்மா ! -
இந்தச் சயித்தம் செய்தது போலும் !

     திங்கள் பால்பொழிவது - சந்திரன் நிலா வீசுவது; பால் உவமை
ஆகுபெயர். பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிய திங்கள் - பூர்ண சந்திரன்; முழு
நிலவின் களங்கமாகிய இருளைப் போக்குவது மண்டபத்தின் பேரொளி..  (51)