அனுமன் பிடித்துவருமாறு கிங்கரரை இராவணன் ஏவுதல் 

5490.

புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது
                                 பொங்க,
எல்லை இல்ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,
'வல்லையின்அகலா வண்ணம், வானையும் வழியை
                                 மாற்றி,
கொல்லலிர்குரங்கை, நொய்தின் பற்றுதிர்,
                          கொணர்திர்' என்றான்.

     புல்லிய முறுவர்தோன்ற பொறாமையும் சிறிது  பொங்க -
(இராவணன்) அற்பமான சிறுநகை உண்டாகவும், பொறாமையும் சிறிது மேற்
கிளம்பவும்; எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி -
அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்கள் எண்ணி்றந்தவர்களை ஏவி அனுப்பி;
வானையும் வழியை - ஆகாய வழியையும்; மாற்றி - தடுத்து; குரங்கை -
அந்தக் குரங்கை; அகலா வண்ணம் வல்லையில் கொல்லலிர் நொய்தின்
பற்றுதிர் கொணர்திர் -
தப்பி அப்புறம் செல்லாதபடி, கொல்லாமல் விரைவில்,எளிதாக, பிடித்துக் கொண்டு வாருங்கள்; என்றான் - என்று
கூறினான்.

     இராவணன்பொறாமைக்குக் காரணம், அவனது அந்தப்புரக் கடிகா
குரங்கால் அழிக்கப்பட்டது , நொய்து - எளிது; மெதுவாக.          (2)