| 5492. | 'நானிலம்அதனில் உண்டு போர்' என நவிலின், அச் சொல், தேனினும்களிப்புச் செய்யும் சிந்தையர், தெரித்தும் என்னின், கானினும்பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி வானினும்பெரியர்; மேனி மலையினும் பெரியர் மாதோ ! |
நானிலம் அதனில்போர் உண்டு என நவிலின் - இந்நிலவுகில் போர்நிகழும் என்று சொன்ன அளவில்; அச்சொல், தேனினும் களிப்பு செய்யும்சிந்தையர் - அந்த வார்த்தை, தேனைவிட மிக்க சுவையை உண்டாக்கும்மனத்தினர்; தெரித்தும் என்னின் - (அன்னவர் தன்மையை) அறிவிப்போம்என்றால்; கானினும் பெரியர் - (நெருக்கம் பரப்பு முதலியவற்றால்) காட்டைவிடப் பெரியவர்; மேனி மலையினும் பெரியர் - உடல் தோற்றத்தில்மலையை விடப் பெரியவர்கள். அவ்வரக்கரின்பரப்பு முதலியவற்றிற்கு காடு முதலிய உலகப் பெரும் பொருளே உவமையாகா என்றால், வேறு உவமைப் பொருள்களை எங்கே தேடுவது என்க. பெரியர் என்ற சொல் பல முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. மாது - ஓ - அசைநிலைகள் (4) |