5496. | சக்கரம்,உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம், சங்கு, முற்கரம் முசுண்டி,பிண்டிபாலம், வேல், சூலம், முட்கோல், பொன் கரக்குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன் குந்தம், வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன; |
சக்கரம் உலக்கை - சக்கராயுதங்களும்உலக்கைகளும்; தாரை வாள் - கூர் நுனியை உடையவாளாயுதங்களும்; பரிசும், சங்கு - இருப்பு வளைதடிகளும் சங்கங்களும்; முற்கரம், முசுண்டி - சம்மட்டிகளும் முசுண்டி என்னும் ஆயுதங்களும்; பிண்டி பாலம் - எறியீட்டிகளும்; வேல், சூலம், முள்கோல் - வேல்களும், சூலங்களும் முட்கோல்களும்; பொன் கரம் குலிசம் - அழகிய ஒளி வீசுகின்ற வச்சிராயுதங்களும்; பாசம், புகர்மழு - கயிற்றின் வடிவான ஆயுதங்களும், ஒளியுள்ள மழுக்களும்; எழு பொன் குந்தம் - மேலெழுந்து தோன்றுகின்ற அழகிய ஈட்டிகளும்; வில், கருங்கணை - வில்லும் பெரிய அம்புகளும்; விட்டேறு - வீசி எறிதற்குரிய விட்டேறுஎன்னும் ஆயுதங்களும்; கழுக் கடை எழுக்கள் - கூர் நுனியை உடைய இரும்புத் தடிகளும்; மின்ன - ஒளிவிட. முடுகுகின்றார்என்று அடுத்த கவியோடு தொடரும், (8) |