5499.

'பனி உறுசெயலை சிந்தி, வேரமும் பறித்தது,
                                 அம்மா !
தனி ஒரு குரங்குபோலாம் ! நன்று நம் தருக்கு !'
                                 என்கின்றார் !
'இனி ஒரு பழிமற்று உண்டோ இதனின் ?' என்று
                            இரைத்துப் பொங்கி,
முனிவுறு மனத்தின்தாவி, முந்துற முடுகுகின்றார்.

     பனிஉறு செயலைசிந்தி - குளிர்ச்சி பொருந்தியஅசோகவனச்
சோலையை அழித்து; வேரமும் பறித்தது - அங்கிருந்த சயித்த
மண்டபத்தையும் அடியோடு பெயர்த்து அழித்தது; தனி ஒரு குரங்கு
போலாம் -
தனியாய் வந்த ஒரு குரங்கு என்றால்; நன்று நம்தருக்கு
என்கின்றார் -
நம் வலிமை நன்றாயிருந்தது என்று சொல்கின்றவர்களாய்;
இதனின் மற்று ஒரு பழி இனி உண்டோ - இதைவிட வேறொரு அவமானம்அரக்கர் குலத்துக்கு இன்னும் உள்ளதோ ?; என்று இரைத்து -
என்றுஆரவாரம் செய்து; பொங்கி - கொதித்து; முனிவுறு மனத்தின் தாவி
முந்துறமுடுகு கின்றார் -
கோபம் கொண்ட மனத்தோடு முற்பட விரைந்து
செல்பவரானார்கள்.

     வேரமும்; உம்மை,உயர்வு சிறப்பு. குரங்கு போலாம் என்பது இழிவுப்
பொருளில் ஒப்பில் போலியாக வந்தது.                          (11)