5522.

தாள்களால்பலர், தடக் கைகளால் பலர், தாக்கும்
தோள்களால்பலர், சுடர் விழியால் பலர், தொடரும்
கோள்களால் பலர், குத்துகளால் பலர், தம் தம்
வாள்களால் பலர், மரங்களினால் பலர்,-மடிந்தார்.

     தாள்களால் பலர்- அனுமனதுகால்களினால் பலரும்; தடக்கைகளால்பலர் - பெரிய கைகளால் பலரும்; தாக்கும் தோள்களால்
பலர் -
மோதும்தோள்களால் பலரும்; சுடர் விழியால் பலரும் - ஒளி
வீசும் விழிகளில்உண்டாகும் நெருப்பினால் பலரும்; தொடரும் கோள்களால்
பலர் -
பற்றிப்பிடித்தலால் பலரும்; குத்துகளால் பலர் - கைகளால்
குத்துதலினால் பலரும்;தம் தம் வாள்களால் பலரும் - அவரவர்களது
வாள்களாலேயே பலரும்;மரங்களினால் பலர் - மரங்களைக் கொண்டு
எறிவதால் பலரும்; மடிந்தார் -இறந்தார்கள்.

     கோள - பற்றிக்கொள்ளுதல். 'தொடரும் கோள்' - மேன் மேல்
மிகுகின்ற வலிமை - என்றும் பொருள்                          (34)