5529. | எடுத்துஅரக்கரை எறிதலும், அவர் உடல் எற்ற, கொடித் திண்மாளிகை இடிந்தன; மண்டபம் குலைந்த; தடக் கையானைகள் மறிந்தன; கோபுரம் தகர்ந்த; பிடிக் குலங்களும்புரவியும் அவிந்தன, பெரிய. |
அரக்கரை எடுத்து- அனுமன்அந்த அரக்கர்களைத் தூக்கி; எறிதலும்- வீசிய அளவில்; அவர் உடல் எற்ற - அவர்களது உடல் போய்த்தாக்கியதனால்; கொடித்திண் - கொடிகள் கட்டிய வலிய; மாளிகை இடிந்தன- உயர்ந்த வீடுகள் நொறுங்கிப் போயின; மண்டபம் குலைந்த - மண்டபம்உருக்குலைந்து அழிந்து போயின; தடக்கை யானைகள் மறிந்தன - பெரியதுதிக்கைகளை உடைய ஆண் யானைகள் இறந்தன; பெரிய பிடிக்குலங்களும்புரவியும் அவிந்த - பெரிய பெண் யானைகளின் கூட்டங்களும் பெரியகுதிரைக் கூட்டங்களும் அழிந்தன. பெரிய, குலம்என்பன, பிடிக்கும் புரவிக்கும் அடை மொழிகள். (41) |