கலி விருத்தம் 5546. | 'சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார் அலந்திலர்;செருக்களத்து அஞ்சினார் அலர்; புலம் தெரிபொய்க் கரி புகலும் புன்கணார் குலங்களின்,அவிந்தனர், குரங்கினால்' என்றார். |
சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மை யார் அலந்திலர் - (அதற்கு,வந்த காவலர்கள்) சினம் மிக்குக் கொண்டவர்களாகிய அந்தக்கிங்கரர்கள் வருந்தி ஓடினார் அல்லர்; செருக்களத்து அஞ்சினார் அல்லர் - போர்க்களத்தில் பயந்து ஓடினார்களும் அல்லர்; புலம் தெரி பொய்க்கரி புகலும் புன்கணார் குலங்களின் - அறிவுக்குப் பொய் என்று தெரிந்தும் பொய்ச்சாட்சி சொல்லும் இழிந்த அற்பர்களுடைய குலங்கள் போல; குரங்கினால் அவிந்தனர் என்றார் -அந்தக்குரங்கினால் போரில் அழிந்து ஒழிந்தனர் என்று கூறினார். 'புலம் தெரிபொய்க் கரி புகலும் புன் கணார் குலங்கள் ஒழிதல்' - உவமை. ஒழுக்கத்தை வற்புறுத்துவது. (58) |