5555. | தோமரம்,உலக்கை, கூர் வாள், சுடர் மழு, குலிசம், தோட்டி, தாம் அரம்தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம், காமர் தண்டுஎழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம், மா மரம்,வலயம், வெங் கோல் முதலிய வயங்க மாதோ; |
தோமரம்உலக்கை கூர்வாள் - பெரிய தண்டாயுதம், உலக்கை, கூர்மையான வாளாயுதம்; சுடர்மழு, குலிசம் - ஒளி வீசுகின்ற எரியிரும்புப் படை, வச்சிராயுதம்; தோட்டி - அங்குசம்; அரம் தின்ற கூர்வேல் - அரத்தினால் அராவிக் கூராக்கப்பட்ட வேலாயுதங்கள்; தழல் ஒளி வட்டம் - நெருப்பின் சுவாலையை உடைய சக்கரம்; சாபம் - வில்; காமர்தண்டு - அழகிய தண்டாயுதம்; எழுக்கள் - இரும்புத் தண்டுகள்; காந்தும் கப்பணம் - ஒளி விடுகின்ற இரும்பு நெருஞ்சி முட்படைகள்; காலபாசம் - யமனுக்கு உரிய கயிற்றின் வடிவான ஆயுதங்கள்; மாமரம், வலயம் - பெரிய மரங்கள், வளையங்கள்; வெம்கோல் - கொடிய அம்புகள்; முதலிய வயங்க - முதலிய ஆயுதங்கள் விளங்கவும். திசைதொறும்செறிவ செல்ல என அடுத்த கவியோடு தொடரும். தாம், மாது, ஓ அடைகள். (6) |