செல்லொடுமேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத் தீர, கல் அளைக்கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால, கொல் இயல்அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம், வீரன் வில் என இடிக்க,விண்ணோர் நடுக்குற, வீரன் ஆர்த்தான்.
மேகம் செல்லொடுசிந்த - மேகங்கள் இடியுடன் சிதறி விழவும்; திரைக் கடல் சிலைப்பு தீர - அலைகளை உடைய கடல் தன் பேரொலி அடங்கிப் போகவும்; கல் அளைக் கிடந்த நாகம் - மலைப் பொந்துகளில் தங்கிக் கிடந்த பாம்புகள்; உயிரொடு விடமும் கால - தமது உயிரோடு நஞ்சையும் ஒன்று சேர்ந்து உமிழவும்; கொல் இயல் அரக்கர் நெஞ்சில் அச்சம் குடிபுக - பிறரைக் கொல்லும் தன்மையுள்ள அரக்கர்களது மனத்தில் பயம் வந்து புகுந்து நிலையாக நிற்கவும்; விண்ணோர் நடுக்கு உற - தேவர்கள் நடுக்கம் அடையவும்; வீரன் வில் என இடிக்க - ரகுவீரனான இராமபிரானது வில்லின் நாணொலி போல முழங்க; வீரன் ஆர்த்தான் - சிறந்த வீரனான அனுமன் கர்ச்சனை செய்தான்.
செல் - இடி;'வான் முழக்குச் செல்' (பரிபாடல் 13.44) (17)